ADDED : ஜூலை 19, 2011 12:23 AM
ஓசூர்: சூளகிரி அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில், கணவர் கண் முன் இளம்பெண் பலியானார்.
திருப்பத்தூரை சேர்ந்தவர் இம்ரான் (28). இவரது மனைவி சாஜிதாபேகம் (25). இவர்களுக்கு மூன்று மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று பெங்களூருவில் உள்ள உறவினர் திருமணத்துக்கு இருவரும் பைக்கில் சென்று விட்டு திருபத்தூருக்கு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சூளகிரி அருகே லிட்டில் ஃபிளவர் பள்ளி அருகே பைக் வந்த போது பள்ளி வளாகத்தில் இருந்து வெளியே வந்த ஆட்டோ பைக் மீது மோதியது. இதில், இம்ரான் மனைவி சாஜிதா பேகம் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இரம்ரான் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்த பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.