ADDED : ஜூலை 19, 2011 12:13 AM
தர்மபுரி: பென்னாகரம் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை சார்பில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி பயிற்சி முகாம் நெருப்பூரில் நடந்தது.
முன்னோடி விவசாயி சண்முகானந்தம் தலைமை வகித்தார். மண் மாதிரி எடுப்பதன் அவசியம், காய்கறி சாகுபடி நுட்பங்கள், இயற்கை பண்ணையம், குழுக்கள் அமைத்தல் துல்லிய பண்ணையம் அமைக்கும் முறைகள், சொட்டு நீர் பாசனம் அமைப்புகள் மூலம் கிடைக்கும் பயன்கள், பல்வேறு மானிய திட்டங்கள் அவற்றில் விவசாயிகளுக்கு வழங்கும் மானிய திட்ட விபரங்கள் ஆகியவை குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் முகுந்தன் விளக்கினார். விவசாயிகள் பெருமாள், பழனி, ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.