ADDED : ஜூலை 17, 2011 01:33 AM
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த திருப்பசாவடிமேடு அய்யனார் கோவில் அருகில் தாலுகா இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதி சபரிநாதன்(24), வழுதரெட்டி சத்தி(32), சரவணன்(28), வி.மருதூர் ராஜ்குமார்(30) கள்ளச்சாராயம் விற்றது தெரிந்தது. அவர்களிடமிருந்து 10 கேன்களில் 350 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து சபரிநாதன், சத்தியை கைது செய்தனர்.