ADDED : ஜூலை 16, 2011 02:16 AM
கடலூர்:பழைய வண்டிப்பாளையம் கும்ப மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
நடந்தது.கடலூர், பழைய வண்டிப்பாளையத்தில் உள்ள கும்ப மாரியம்மன் கோவில்
செடல் திருவிழாவை முன்னிட்டு நேற்று (15ம் தேதி) காலை ஊத்துக்காட்டம்மன்
கோவிலில் இருந்து கரகம் வீதியுலாவும், பகல் ஒரு மணிக்கு அம்மனுக்கு
அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து சாகை வார்த்தல் மற்றும்
செடல் உற்சவம் நடந்தது.
இதில் அம்மனுக்கு வேண்டுதல் கொண்ட பக்தர்கள் செடல்
போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவுஅம்மன் வீதியுலா நடந்தது.