/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தாலுகா அலுவலகத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி பலிதாலுகா அலுவலகத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி பலி
தாலுகா அலுவலகத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி பலி
தாலுகா அலுவலகத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி பலி
தாலுகா அலுவலகத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி பலி
ADDED : ஜூலை 14, 2011 01:49 AM
திருச்செங்கோடு: முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்க, தாலுகா அலுவலகத்துக்கு வந்த மூதாட்டி மயங்கி விழுந்து இறந்தார்.
திருச்செங்கோடு நரிப்பள்ளத்தை சேர்ந்தவர் காத்தளா (65). அவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி செட்டிலாகி விட்டனர். மகன் மற்றும் மகள்களுடன் வசிக்க விரும்பாத காத்தளா, தனியாக வசித்து வந்தார். அரசின் முதியோர் உதவி தொகைக்கு விண்ணப்பிக்க, திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணிக்கு காத்தளா வந்துள்ளார். அப்போது தாலுகா அலுவலக வசலில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள், காத்தளாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தனர். ஆனால், அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீஸாருக்கு கதவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், காத்தளா உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


