/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கழிவறையில் போட்டு வைத்ததால் வீணாகும் உடற் பயிற்சி உபகரணம்கழிவறையில் போட்டு வைத்ததால் வீணாகும் உடற் பயிற்சி உபகரணம்
கழிவறையில் போட்டு வைத்ததால் வீணாகும் உடற் பயிற்சி உபகரணம்
கழிவறையில் போட்டு வைத்ததால் வீணாகும் உடற் பயிற்சி உபகரணம்
கழிவறையில் போட்டு வைத்ததால் வீணாகும் உடற் பயிற்சி உபகரணம்
ADDED : ஜூலை 14, 2011 01:44 AM
நாமக்கல் : மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த உடற்பயிற்சிக் கூடத்தின்உபகரணங்களை கழிவறையில் போட்டு வைத்துள்ளதால், வீணாகும் நிலை உருவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், புதிய கட்டிடம் அருகே உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டிருந்து. மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம், அந்த உடற் பயிற்சிக் கூடம் பராமரிக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடத்துக்கு இளைஞர் உள்ளிட்டோர் வரவில்லை. அதனால் பெரும்பாலான நாட்களில் உடற்பியற்சிக் கூடம் மூடிக்கிடந்தது. முந்தைய மாவட்ட கலெக்டர் சகாயம், பயன்பாடற்ற நிலையில் இருந்த உடற்பயிறசிக் கூடத்தை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினர் பயன்படுத்த அனுதமதியளித்தார். அங்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளை பயிற்சிக்கு அழைத்து வரும் பெற்றோர் மிதியடி தயார் செய்தல் போன்ற கைத்தொழிலை கற்று வருகின்றனர். எனவே, பயிற்சிக் கூடத்தில் இருந்த உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை கழிவறையில் போட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.
அதனால், அந்த விளையாட்டுப் பொருள் மற்றும் உபகரணங்களும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினர் கவனத்தில் கொண்டு, விளையாட்டு உபகரணங்களை பாதுகாப்பான அறைக்கு மாற்ற வேண்டும்.


