Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு மருத்துவமனையில் "குடிமகன்' தொல்லை

அரசு மருத்துவமனையில் "குடிமகன்' தொல்லை

அரசு மருத்துவமனையில் "குடிமகன்' தொல்லை

அரசு மருத்துவமனையில் "குடிமகன்' தொல்லை

ADDED : ஜூலை 13, 2011 02:19 AM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் 'குடிமகன்களால்' தொந்தரவு ஏற்பட்டு வருவதால் டாக்டர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. தினமும் இரவு நேர பணிகளில் டாக்டர்கள், பணியாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். ஆனால், சில சமூக விரோதிகள் இரவு நேரங்களில் குடித்துவிட்டு மருத்துவமனையின் முன் தகராறு செய்து வருகின்றனர். இதனால், இங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், டாக்டர்கள், பணியாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன் கூறியதாவது: இங்கு முன்பு போலீசார் இல்லாத நிலை உள்ளது. இதனால், இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருகிறது. பொள்ளாச்சி டி.எஸ்.பி., யிடம் அடுத்து வரும் கூட்டத்தில் இதுகுறித்து கடிதம் வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் முன் புறகாவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us