பந்தலூர் : பந்தலூர் அய்யன் கொல்லிபூலகுண்டு சோதனை சாவடி அருகில் சேரம்பாடி சிறப்பு பிரிவு போலீஸ் தினேஷ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கேரள மாநிலம் நோக்கி சென்ற லாரியை சோதனை செய்தபோது,கேரள மாநிலத்துக்கு மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. அய்யன்கொல்லி பகுதியில் மணல் குவித்து வைக்கப்பட்டு, அங்கிருந்து தொடர்ந்து மணல் கடத்தி வருவதும், கடத்தலுக்கு முன்பாக ஒரு ஜீப் (கே. எல்.11,இ-2388) நோட்டமிட்டு செல்வதும் தெரியவந்தது. லாரி அம்பலமூலா போலீசில் ஒப்படைக்கப்பட்டது. அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சுதீ(26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜீப்பை போலீசார் தேடிவருகின்றனர்.