/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மனு கொடுக்க மக்கள் வெயிலில் காத்திருப்புமனு கொடுக்க மக்கள் வெயிலில் காத்திருப்பு
மனு கொடுக்க மக்கள் வெயிலில் காத்திருப்பு
மனு கொடுக்க மக்கள் வெயிலில் காத்திருப்பு
மனு கொடுக்க மக்கள் வெயிலில் காத்திருப்பு
ADDED : ஜூலை 11, 2011 09:21 PM
உடுமலை : உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர் கூட்டத்தில், மனு அளிக்க பல மணி நேரம் மக்கள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.பொதுமக்களின் வசதிக்காக கோட்டாட்சியர் அலுவலகங்களிலேயே திங்கள் கிழமை தோறும் குறைதீர்கூட்டம் நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, உடுமலை தாலுகா அலுவலகத்தில் வாரம்தோறும் குறை தீர் கூட்டம் நடத்தப்படுகிறது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் கோரி மனு அளிக்க வருகின்றனர். தாலுகா அலுவலகத்திற்கு வரும் மக்கள் வெயிலில் காத்திருந்து மனு அளிப்பதால், பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:குறை தீர் கூட்டத்தில் மனு அளிக்க பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கூட்டத்திற்கு மனு அளிக்க வருபவர்களுக்கு நிழல் வசதி ஏற்படுத்தாததால், வெயிலில் காத்திருக்க வேண்டும்; கால்கடுக்க நிற்பதால், சோர்வு ஏற்படுகிறது; வயதானவர்கள் நிற்க முடியாமல் திணறுகின்றனர். வெயிலில் நிற்பதால் சிலர் மயங்கி கீழே விழக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, உரிய அதிகாரிகள் கூட்டம் நடைபெறும் போது, போதிய வசதிகளை மேம்படுத்த வேண்டும்,' என்றனர்.234 பேர் மனு: நேற்று குறைதீர் கூட்டம் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அழகு மீனா மற்றும் தாசில்தார் நல்லசாமி, மடத்துக்குளம் தாசில்தார் சின்னச்சாமி முன்னிலையில் நடந்தது. இதில், வீட்டு மனைப்பட்டா கோரி 180, முதியோர் உதவித்தொகை 38, குடும்ப அட்டைக்காக 3,விதவை உதவித்தொகை கோரி 10 பேரும் மனு அளித்தனர். மேலும் மற்ற இனங்களில் 3 மனுக்களும் பெறப்பட்டன.