Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/திராட்சை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

திராட்சை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

திராட்சை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

திராட்சை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : ஜூலை 13, 2011 10:33 PM


Google News

சின்னமனூர் : விளைச்சல் குறைவால் திராட்சை விலை ரூ.40 க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் சின்னமனூர், கம்பம், காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், சுருளிப்பட்டி, கூடலூர், சின்னஓவலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இத்திராட்சை கொடிகள் கவாத்து அடித்து, பஞ்சு கட்டி பூத்து துளிர்விடும் பருவத்தில் இருந்தது. அப்போது மழை பெய்ததால் திராட்சை கொடியில் பூ பூத்து வெளியில் வர முடியாமல் போனது.



தற்போது நல்ல முறையில் இவை விளைந்துள்ளது. ஜூன் மாத இறுதியில் அறுவடை துவங்கியது. விளைச்சல் குறைவால் கடந்த சில நாட்களாக கிலோரூ. 40 வரை விற்கப்படுகிறது.(கடந்த வாரம் ரூ. 24). திராட்சை விவசாயிகள் கூறும் போது, கடந்த பல மாதங்களாக உற்பத்தி செலவினங்களுக்கு கூட கை கொடுக்காத நிலையில் திராட்சையின் விலை இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல விலை கிடைத்திருப்பது மகிழ்ச்சி,'என்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us