/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காமராஜர் பிறந்தநாள் : சிலைக்கு கலெக்டர் மரியாதைகாமராஜர் பிறந்தநாள் : சிலைக்கு கலெக்டர் மரியாதை
காமராஜர் பிறந்தநாள் : சிலைக்கு கலெக்டர் மரியாதை
காமராஜர் பிறந்தநாள் : சிலைக்கு கலெக்டர் மரியாதை
காமராஜர் பிறந்தநாள் : சிலைக்கு கலெக்டர் மரியாதை
விருதுநகர் : விருதுநகரில் காமரார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சாத்தூர்: சாத்தூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்ததின விழா எஸ்.அய்யப்பன் தலைமையில் நடந்தது. முன்னாள் மாவட்ட காங்., தலைவர் தங்கவேல்,மாவட்ட செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கபட்டோரின் குழந்தைகள் 30 பேருக்கு ஸ்கூல்பேக்,நோட்டு புத்தகங்களை விருதுநகர் லோக்., தொகுதி தலைவர் ஜி.வி.கார்த்திக் வழங்கினார். முக்குராந்தலில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பிரேமானந்த் நன்றி கூறினார்.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நகர, ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காமாரஜர் பிறந்தநாள் விழா நடந்தது நகர தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மேற்கு வட்டார தலைவர்கள் சுந்தரம், தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர்.புதுப்பட்டி நகர தலைவர் திருமலை வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேசன் மாணவர்களுக்கு இலவச நோட்டு, எழுது பொருட்களையும், முதியோர்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். நகர செயலாளர் ஹனீபா, இளைஞரணி தொகுதி தலைவர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர் சத்யமூர்த்தி உட்பட கட்சியினர் கலந்து கொண்டர். ஆலோசணை குழு தலைவர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
சிவகாசி: சிவகாசியில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுவித்தனர். நகர காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில், ஒன்றிய தலைவர்(பொறுப்பு) பழனிச்செல்வம் முன்னிலையில் ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜகோபால், லோக்சபா தொகுதி தலைவர் கார்த்திக் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நகராட்சி துணை தலைவர் அசோகன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாவட்டபொருளாளர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் கடற்கரை தங்கம், நகர செயலாளர் ராஜபாண்டியன், முன்னாள் மாவட்ட பொருளாளர் கதிரேசன், நகர பொருளாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


