பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரத்தில் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில், மாவட்ட நிர்வாகி சக்தி பிரபாகரன், கீழப்பாவூர் ஒன்றிய மதிமுக செயலாளர் ராமஉதயசூரியன் தலைமை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் ஜெகசெல்வம், ஆசிரியர் சொக்கத்தங்கம், ராமசாமி, கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் ராமகிருஷ்ணன், நடராஜன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், அருண், பொன்ராஜ், திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் இளங்கோ, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஸ்டீபன், புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் முருகேசன், இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் மாடசாமி, விடுதலை சிறுத்தைகள் கொத்தடிமை ஒழிப்பு மாவட்ட செயலாளர் துரைஅரசு முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசியல் சட்டத்தில் இருந்து மரண தண்டனையை நீக்க வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது. பின்னர் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி அனைவரும் பேசினர். நிகழ்ச்சியில் இந்திய கம்யூ., முருகன், சுடலைமாடன், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், ஒன்றிய துணை செயலாளர் ரவிகுமார், தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள் ஜோசப், ராசு, ராஜேஸ், வீ.கே.புதூர் இந்திய கம்யூ., தாலுகா செயலாளர் அய்யப்பன், மகேஷ், கண்ணதாசன், நேசன், ரவி, தேன்ராஜ், பத்மநாபன், மறுமலர்ச்சி ரத்ததான கழக செயலாளர் ஆசிரியர் சுகுமார், பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். மதிமுக வக்கீல் அணி துணை செயலாளர் சுரேஷ் (எ) சுப்பையா நன்றி கூறினார்.