/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முன்னாள் அமைச்சர் உதவியாளரின் ஜாமின் மனு 16க்கு ஒத்திவைப்புமுன்னாள் அமைச்சர் உதவியாளரின் ஜாமின் மனு 16க்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் உதவியாளரின் ஜாமின் மனு 16க்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் உதவியாளரின் ஜாமின் மனு 16க்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் உதவியாளரின் ஜாமின் மனு 16க்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 14, 2011 02:30 AM
கோவை : முன்னாள் அமைச்சரின் உதவியாளரின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்
பட்டது.திருப்பூர், பெருமாநல்லூரை சேர்ந்தவர் குணசேகரன் (42). இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலம், கோவை, பேரூர் பச்சாபாளையத்தில் உள்ளது. 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்நிலத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர் பழனிசாமியின் உதவியாளர் நாகராஜ், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பசுபதி, மீன் கடை சிவா, புரோக்கர் வேணுகோபால் ஆகியோரை பேரூர் போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் புரோக்கர் தவிர மற்ற மூவரும் ஜாமின் கேட்டு ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இவர்கள் மீது புகார் அளித்த குணசேகரன், வக்கீல் மூலம் கோர்ட்டில் ஆஜராகி, வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி இது குறித்து அரசு வக்கீலிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அரசு வக்கீல் போலீசாரிடம் பதில் பெற்று விளக்கம் தருவதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து, ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 16ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.