/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வருமானவரிச் சட்டம், வரிபிடித்தம்நெல்லையில் நாளை சிறப்பு கருத்தரங்குவருமானவரிச் சட்டம், வரிபிடித்தம்நெல்லையில் நாளை சிறப்பு கருத்தரங்கு
வருமானவரிச் சட்டம், வரிபிடித்தம்நெல்லையில் நாளை சிறப்பு கருத்தரங்கு
வருமானவரிச் சட்டம், வரிபிடித்தம்நெல்லையில் நாளை சிறப்பு கருத்தரங்கு
வருமானவரிச் சட்டம், வரிபிடித்தம்நெல்லையில் நாளை சிறப்பு கருத்தரங்கு
ADDED : ஆக 22, 2011 02:41 AM
திருநெல்வேலி:வருமானவரிச் சட்டம், வருமானவரி பிடித்தம் (டி.டி.எஸ்) மற்றும்
அவற்றை திரும்ப பெறுவது பற்றிய கருத்தரங்கம் நாளை (23ம் தேதி) நெல்லையில்
நடக்கிறது.நெல்லை ஜங்ஷன் ஆர்யாஸ் ஓட்டலில் நடக்கும் கருத்தரங்கில் சென்னை
வருமானவரி ஆணையர்கள் சங்கரன், செல்வகணேஷ் மற்றும் நெல்லை வருமானவரி ஆணையர்
தனராஜ், அதிகாரி வேணுகுமார் கருத்துரை வழங்குகின்றனர்.வருமானவரி பிடித்தம்
செய்யும் அரசு மற்றும் நிதி நிறுவன அதிகாரிகளும், வங்கி நிர்வாகிகளும்
தங்கள் நிறுவனத்தில் வரிபிடித்தம் செய்வது சம்பந்தமான பிரச்னைகளை தெரிந்து
கொள்ளலாம்.
எனவே அதிகாரிகளும், வரி கட்டுவோரும், பொதுமக்களும் கலந்து
கொண்டு பயன்பெறவேண்டும் என வருமான வரித்துறையும், நெல்லை பட்டயக்
கணக்கானாளர் பயிற்சி நிறுவனமும் கேட்டுக் கொண்டுள்ளது.குறிப்பாக
சி.ஏ.பயிலும் மாணவர்களும், பட்டயக் கணக்காளர் மற்றும் அலுவலர்களும் கணக்கு
பதிவு சம்பந்தமான அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும் என நெல்லை கிளை
தலைவர் ஆடிட்டர் சுடலைமுத்து, செயலாளர் ராமசாமி கேட்டுக்
கொண்டுள்ளனர்.ஏற்பாடுகளை பட்டயக் கணக்காளர் கிளை நிர்வாகி சுப்பையா,
வருமானவரித்துறை அதிகாரி வேணுகுமார் செய்துள்ளனர்.