/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உள்ளாட்சித் தேர்தல்: 8,800 ஓட்டுப் பெட்டிகள் தயார் :போட்டியிட 677 பெண்கள் தயாரா?உள்ளாட்சித் தேர்தல்: 8,800 ஓட்டுப் பெட்டிகள் தயார் :போட்டியிட 677 பெண்கள் தயாரா?
உள்ளாட்சித் தேர்தல்: 8,800 ஓட்டுப் பெட்டிகள் தயார் :போட்டியிட 677 பெண்கள் தயாரா?
உள்ளாட்சித் தேர்தல்: 8,800 ஓட்டுப் பெட்டிகள் தயார் :போட்டியிட 677 பெண்கள் தயாரா?
உள்ளாட்சித் தேர்தல்: 8,800 ஓட்டுப் பெட்டிகள் தயார் :போட்டியிட 677 பெண்கள் தயாரா?
ADDED : ஜூலை 13, 2011 10:20 PM
கோவை : தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், மூன்றில்
ஒரு பங்கு வார்டுகள், பெண்கள் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்காக,
கோவை மாவட்டத்தில் 8,800 ஓட்டுப் பெட்டிகள் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் அக்.,
26ல் முடிவடைகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு
மேற்கொண்டுள்ளது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில்
கோவை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்
கூறியதாவது:வரும் 18க்குள் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை
முடிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்ட பஞ்சாயத்து அமைப்புகள்
2,031 வார்டுகள் ஆக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 677 வார்டுகள் (மூன்றில் ஒரு
பங்கு) பெண்கள் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு வாக்காளரும்
பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு
கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய நான்கு பேரை தேர்வு செய்ய ஓட்டு அளிக்க
வேண்டும். தேர்தலுக்காக 9,000 ஓட்டுப் பெட்டிகள் உள்ளன.இரும்பாலான இந்த
பெட்டிகளில் இருந்த பழுதுகள் நீக்கப்பட்டுள்ளன. பழுது பார்க்கப்பட்ட பின்
8,800 பெட்டிகள் நல்ல நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வார்டில்
400 வாக்காளர்களுக்கு கீழ் இருந்தால், ஒரே பூத்தில் இரண்டு வார்டுகளுக்கு
சேர்த்து ஓட்டுப் பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பூத்தில் ஒரு
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆறு ஊழியர்கள் பணியில்
ஈடுபடுத்தப்படுவர். இரண்டு வார்டுகளுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறும் பூத்தில்
கூடுதலாக ஒரு தேர்தல் அலுவலர் பணியில் ஈடுபடுத்தப்படுவார். தேர்தலில்
போட்டியிடும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கட்சி சின்னம் பயன்படுத்த
அனுமதி இல்லை. இவர்களுக்கு ஒதுக்க, 120 பொதுச் சின்னங்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு
போட்டியிடுபவர்கள் மட்டுமே கட்சி சின்னத்தை பயன்படுத்தலாம். ஓட்டுப் பதிவு
நடைபெறும் மையங்களின் எண்ணிக்கையை கணக்கிட்ட பின், அம்மையங்களில் சாய்வு
பாதை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


