/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சன் "டிவி' சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமின்சன் "டிவி' சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமின்
சன் "டிவி' சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமின்
சன் "டிவி' சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமின்
சன் "டிவி' சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : ஆக 23, 2011 11:28 PM
உடுமலை : காகித ஆலை மோசடி வழக்கில் சன் 'டிவி' நிர்வாகி சக்சேனாவுக்கு
நிபந்தனை ஜாமின் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
உடுமலையை சேர்ந்த
சீனிவாசன் தனக்கு சொந்தமான கருமத்தம்பட்டியிலுள்ள காகித ஆலையை
திருவல்லிக்கேணி தி.மு.க.,எம்.எல்.ஏ., அன்பழகன், சன் 'டிவி' நிர்வாகி
சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் உட்பட எட்டு பேர் மிரட்டி பறித்து
கொண்டதாக, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில், சன் 'டிவி' நிர்வாகி சக்சேனா மற்றும் உதவியாளர் அய்யப்பனை
ஆக.,3ல் புழல் சிறையில் இருந்தபோது, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு
போலீசார் கைது செய்தனர். சக்சேனா தரப்பில் ஜாமின் மனு தாக்கல்
செய்யப்பட்டது. நேற்று ஜாமின் மனு மீதான விசாரணை நடந்தது. சக்சேனா
தரப்பில் வக்கீல் செந்தில்குமாரும், அரசு தரப்பில் அரசு வக்கீல் ராஜசேகரும்
ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஜே.எம்.1 (பொறுப்பு)
மாஜிஸ்திரேட் ஷர்மிளா சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மறு உத்தரவு வரும் வரை சக்சேனா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நாள்தோறும்
காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என
உத்தரவிட்டார்.