/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குப்பக்குறிச்சியில் தார் ரோடு அமைக்ககலெக்டரிடம் பொதுமக்கள் மனுகுப்பக்குறிச்சியில் தார் ரோடு அமைக்ககலெக்டரிடம் பொதுமக்கள் மனு
குப்பக்குறிச்சியில் தார் ரோடு அமைக்ககலெக்டரிடம் பொதுமக்கள் மனு
குப்பக்குறிச்சியில் தார் ரோடு அமைக்ககலெக்டரிடம் பொதுமக்கள் மனு
குப்பக்குறிச்சியில் தார் ரோடு அமைக்ககலெக்டரிடம் பொதுமக்கள் மனு
ADDED : ஜூலை 15, 2011 02:15 AM
திருநெல்வேலி:மானூர் யூனியனிற்குட்பட்ட குப்பக்குறிச்சி கிராமத்தில் தார் ரோடு அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.இது குறித்து கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;குப்பக்குறிச்சி கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
நாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 4 கி.மீ தூரத்தில் சுடுகாடு மற்றும் விவசாய விளை நிலங்கள் உள்ளன. இதன் அருகிலேயே சுடலை மற்றும் எம்பெருமாள் சாஸ்தா கோயில்கள் அமைந்துள்ளன. மேற்கண்ட இடங்களுக்கு செல்வதற்கு வசதியாக பல ஆண்டுகளுக்கு முன் ரோடு போடப்பட்டது.
தற்போது இந்த ரோடு சேதமடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த ரோட்டின் வழியாக விளைநிலங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை எடுத்து செல்லவும், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லவும் முடியாத நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் கோயில் விழாக்களுக்கு இந்த ரோட்டின் வழியாக செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே குப்பக்குறிச்சி முதல் எம்பெருமாள் சாஸ்தா கோயில் வரை தார் ரோடு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் மனுவில் கூறியுள்ளனர்.