ADDED : செப் 15, 2011 11:50 PM
தூத்துக்குடி : தூத்துக்குடியிலிருந்து கோவில்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் புறப்பட்டது.
10.30 மணியளவில் தெற்குதிட்டங்குளம் அருகே சென்றபோது, மர்ம நபர்கள் இதன் மீது கற்களை வீசினர். இதில், பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்தது. தப்பியோடிய மர்மநபர்களை, கிழக்கு போலீசார் தேடிவருகின்றனர். ஜான்பாண்டியன் கைது, பரமக்குடி சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை மொத்தம் நான்கு அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.


