/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர், அவிநாசியில் 127 சிலைகள் விசர்ஜனம்திருப்பூர், அவிநாசியில் 127 சிலைகள் விசர்ஜனம்
திருப்பூர், அவிநாசியில் 127 சிலைகள் விசர்ஜனம்
திருப்பூர், அவிநாசியில் 127 சிலைகள் விசர்ஜனம்
திருப்பூர், அவிநாசியில் 127 சிலைகள் விசர்ஜனம்
ADDED : செப் 04, 2011 11:07 PM
திருப்பூர் : திருப்பூர், அவிநாசியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 127
விநாயகர் சிலைகள், நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விசர்ஜனம்
செய்யப்பட்டன.
திருப்பூர் சாமுண்டிபுரம், அனுப்பர்பாளையம் உள்ளிட்ட
பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 18
சிலைகள், பிஷப் பள்ளிக்கு அருகில் கொண்டு வரப்பட்டன. இலங்கை மட்டக்களப்பு
எம்.பி., நந்திகோடி யோகேஸ்வரன், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர்
முருகேஷ் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் அண்ணாதுரை, மாநகர
அமைப்பாளர் முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். * பஜ்ரங்தள் அமைப்பு சார்பில்
பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 13 சிலைகள், பி.என்., ரோடு சாந்தி தியேட்டர்
பகுதிக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது; அங்கிருந்து விசர்ஜன ஊர்வலம்
புறப்பட்டது. மாவட்ட இணை அமைப்பாளர் குருஜி தலைமை வகித்தார்; மாநில இணை
அமைப்பாளர் சிவலிங்கம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட அமைப்பாளர்
விஸ்வநாதன், துணை அமைப்பாளர் பிளவேந்திரன், 15 வேலம்பாளையம் செயலாளர்
ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * திருப்பூர் எம்.எஸ்., நகர், காலேஜ்
ரோடு, வ.உ.சி., நகர் கொடிகம்பம் உள்ளிட்ட பகுதிகளில், சிவசேனா சார்பில்
பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 சிலைகளும், நேற்று நெசவாளர் காலனிக்கு எடுத்து
வரப்பட்டன; பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட 40 குட்டி பிள்ளையார்
சிலைகளுடன், நேற்று மாலை நெசவாளர் காலனியில் விசர்ஜன ஊர்வலம் துவங்கியது.
மாநில தலைவர் குமாரராஜா ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் சரவணன்
தலைமை வகித்தார். கோவை மண்டல தலைவர் முருகன், மதுரை மண்டல தலைவர்
மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * பாரத்சேனா சார்பில் பிரதிஷ்டை
செய்யப்பட்ட 27 சிலைகள் நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டன. திருப்பூர் வடக்கு
பகுதி ஊர்வலம், புது பஸ் ஸ்டாண்டில் துவங்கியது. மாவட்ட செயலாளர் நாகராஜ்
துவக்கி வைத்தார்; தெற்கு பகுதி ஊர்வலம், தமிழ்நாடு தியேட்டர் பகுதியில்
துவங்கியது. மாவட்ட துணை தலைவர் பாலு துவக்கி வைத்தார். நடராஜ் தியேட்டர்
பகுதியை சிலைகள் வந்தடைந்த பின், அப்பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது;
மாவட்ட தலைவர் தம்புஜி தலைமை வகித்தார். மாநில தலைவர் வீரா ராஜா பேசினார்.
திருப்பூரில் இருந்து 70 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,
ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்பட்டன. அவிநாசி:
அவிநாசி ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில், 57 விநாயகர் சிலைகள்
பிரதிஷ்டை செய்யப்பட்டன. வ.உ.சி., திடலில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு,
இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். ஒன்றிய
தலைவர் சம்பத், நகர தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். அவிநாசி நகர
பொறுப்பாளர் கார்த்தி வரவேற்றார். கோட்ட ஒருங்கிணைப்பாளர் கி÷ஷார்குமார்,
பொது செயலாளர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்.