திருவெறும்பூர்: அரியமங்கலத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட ரவுடியை போலீஸார்
கைது செய்தனர்.
அரியமங்கலத்தை சேர்ந்த பிரபல ரவுடியாக இருந்த பெரியசாமியின்
மகன் சிலம்பரசன். நேற்று முன்தினம் மாலை திடீர் நகரை சேர்ந்த ஹக்கீம் மகன்
அப்துல் அஜீஸ் (15) என்பவர் மீது பைக்கில் மோதினார். அதை தட்டிக்கேட்ட
ஹக்கீமை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். ஹக்கீம் கொடுத்த
புகாரின்பேரில், அரியமங்கலம் போலீஸார் செய்து, சிலம்பரசனை கைது செய்தனர்.