Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கள்ள மார்க்கெட்டில் மண்ணெண்ணெய் , அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கள்ள மார்க்கெட்டில் மண்ணெண்ணெய் , அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கள்ள மார்க்கெட்டில் மண்ணெண்ணெய் , அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கள்ள மார்க்கெட்டில் மண்ணெண்ணெய் , அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ADDED : ஜூலை 21, 2011 02:34 AM


Google News
காட்டுமன்னார்கோவில் : மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இருந்து மண்ணெண்ணெய் வாங்கி கள்ள மார்க்கெட்டில் விற்கும் வியாபாரிகள் எண்ணிக்கை அதிகாரித்து வருகிறது. அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் ஆட்களைப் பிடிக்காமல் கேட்பாரற்று கிடக்கும் மண்ணெண்ணெய் மற்றும் அரிசியை ஒப்புக்காக கைப்பற்றும் நடவடிக்கை மட்டுமே தொடர்கிறது.ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களுடன் பேரூராட்சி பகுதிகளில் 5 லிட்டர், ஊராட்சியில் 3 லிட்டர், நகராட்சி பகுதிகளில் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.பெரும்பாலான கடைகளில் ஒரே நாளில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதால் அதிகாலை முதல் பொதுமக்கள் கடை முன்பு கூடுவதால் ஒரு சில இடங்களில் கூட்டத்தினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தகராறு நடந்து போலீஸ் பாதுகாப்புடன் பொருட்கள் வழங்கும் நிலை உள்ளது.அவ்வாறு கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து வாங்கி வருபவர்களிடம் ரேஷன் கடைக்கு சற்று தூரத்தில் நிற்கும் வியாபாரிகள் அதிக விலை தருவதாக கூறி 12 ரூபாய் மண்ணெண்ணையை 24 ரூபாய் கொடுத்து வாங்கி பாரல்களில் நிரப்பிக்கொண்டு கள்ளத்தனமாக டெம்போ மூலம் கடத்தி , லிட்டர் 40 ரூபாய்க்கு விற்று கொள்ளையடிக்கின்றனர்.

கள்ள மார்க்கெட்டில் மண்ணெண்ணெய்விற்பனை செய்யும் கும்பல் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு ரேஷன் கடை முன்பும், பங்க் முன்பும் இருந்தும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஏனோ நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காக்கின்றனர்.அப்படியே ஆய்வு என்ற பெயரில் சோதனை செய்வதாகக் கூறி கேட்பாரற்று கிடக்கும் மண்ணெண்ணெய் பாரல்கள், கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி என பறிமுதல் செய்வதோடு சரி. ஆட்களைப் பிடித்து உரிய தண்டனை வழங்குவதில்லை.ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்கி விற்பவரையும், வாங்கும் வியாபாரிகளையும் கடுமையாக தண்டித்தால் மட்டுமே கள்ள மார்க்கெட்டில் மண்ணெண்ணெய் விற்பனை செய்வது குறையும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us