/உள்ளூர் செய்திகள்/தேனி/கட்டி முடிக்கப்பட்ட பாலம் பயன்பாட்டிற்கு வர தாமதம்கட்டி முடிக்கப்பட்ட பாலம் பயன்பாட்டிற்கு வர தாமதம்
கட்டி முடிக்கப்பட்ட பாலம் பயன்பாட்டிற்கு வர தாமதம்
கட்டி முடிக்கப்பட்ட பாலம் பயன்பாட்டிற்கு வர தாமதம்
கட்டி முடிக்கப்பட்ட பாலம் பயன்பாட்டிற்கு வர தாமதம்
ADDED : ஜூலை 13, 2011 10:31 PM
சின்னமனூர் : சின்னமனூர்-மார்க்கயன் கோட்டை ரோட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
சின்னமனூரிலிருந்து மார்க்கயன் கோட்டை வழியாக போடி வரை உள்ள 38 கி.மீ., ரோட்டை மூன்றாண்டுகளுக்கு முன்பு இருவழி சாலையாக மாற்றியமைக்க நெடுஞ்சாலை துறை பணிகளை துவக்கியது. பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த பாதையில் உள்ள 7 பாலங்கள் மட்டும் அகலப்படுத்தப்படாமல் இருந்தது. ரூ.63 லட்சம் நிதியில் இந்த பாலங்கள் கடந்த சில மாதங்களாக அகலப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.மார்க்கயன்கோட்டை ரோட்டில் உள்ள முக்கிய பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


