ADDED : ஜூலை 13, 2011 02:46 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக
பொது குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,தலைமை
வகித்தார். மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலர் தமீமுன் அன்சாரி,
ஆம்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா முன்னிலை வகித்தனர். நகர
செயலர் மதார்கான் வரவேற்றார். அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ., வைகை செல்வன்,
நகர தலைவர் இப்ராஹிம் பாதுஷா, மாவட்ட தலைவர் முகமது இப்ராஹிம் பேசினர்.
அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டிற்கு காயிதே மில்லத் பஸ் ஸ்டாண்ட்
பெயர் வைக்கவும், தொகுதியில் அரசு சார்பாக கலை கல்லூரி, அருப்புக்கோட்டை
ரயில்வே ஸ்டேஷன் பணிகளை விரைந்து முடித்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பது @பான்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


