Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது

ADDED : செப் 28, 2011 11:45 PM


Google News

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்ற ராமதாஸ், டல்பின்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கொலைமிரட்டல் விடுத்து தலைமறைவான படகு உரிமையாளர் செல்வகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து படகில் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை கடத்தி செல்ல உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு, ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க செல்ல தயாரான படகுகளில் கியுபிரிவு போலீசார் சோதனை செய்தனர். ஒரு படகினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிலோ கஞ்சா, 15 கிலோ புகையிலை, மூக்குப்பொடி 8 கிலோ, பான்பராக் பாக்கெட்டுகள் 2 கிலோ உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். படகில் இருந்த ராமதாஸ் (55), டல்பின்ராஜ் (34) ஆகியோரை கைது செய்து, மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவான படகு உரிமையாளர் செல்வகுமார், மொபைல்போன் மூலம் கியுபிரிவு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இவர், விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ரெக்சின், ஜெனரேட்டர், பேட்டரிசெல், துப்பாக்கி குண்டுகள், சாட்டிலைட்போன் மற்றும் பிரவுன்சுகர் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதற்காகவும், புலிகள் இயக்கத்தினர் பலரை படகில் ஏற்றிச்சென்றதற்காகவும் கைது செய்யப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் தேடி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us