Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இன்ஜி., கல்லூரி இசைவுக்கு ரூ. 15 லட்சம் லஞ்சம்?திருச்சி பல்கலை துணைவேந்தர் மீது "திடுக்' புகார்

இன்ஜி., கல்லூரி இசைவுக்கு ரூ. 15 லட்சம் லஞ்சம்?திருச்சி பல்கலை துணைவேந்தர் மீது "திடுக்' புகார்

இன்ஜி., கல்லூரி இசைவுக்கு ரூ. 15 லட்சம் லஞ்சம்?திருச்சி பல்கலை துணைவேந்தர் மீது "திடுக்' புகார்

இன்ஜி., கல்லூரி இசைவுக்கு ரூ. 15 லட்சம் லஞ்சம்?திருச்சி பல்கலை துணைவேந்தர் மீது "திடுக்' புகார்

ADDED : ஆக 23, 2011 04:47 AM


Google News
திருச்சி:'திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்குட்பட்ட, புதிதாக எம்.இ., பாடத்திட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு இசைவு வழங்க, துணைவேந்தர், 15 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்' என்ற கல்லூரி தலைவர்களின் குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கு உட்பட்ட, ஜெயராம் பொறியியல் கல்லூரி, எம்.ஏ.எம்., குழும பொறியியல் கல்லூரிகள், ஷிவானி குழும பொறியியல் கல்லூரிகள் உட்பட, ஆறு கல்லூரிகளில், புதிதாக பொறியியல் பட்ட மேற்படிப்புக்கு (எம்.இ.,) ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் அளித்தது.

இக்கல்லூரிகளில் சென்னையில் நடக்கும் கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டது. சென்னை அண்ணா பல்கலையில் எம்.இ., மாணவருக்காக கவுன்சிலிங் நேற்று நடந்தது. அதில், திருச்சியைச் சேர்ந்த ஆறு கல்லூரிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை.

அதிர்ச்சியடைந்த, ஜெயராம் கல்லூரித் தலைவர் சுப்ரமணியன், எம்.ஏ.எம்., கல்லூரி முதல்வர் மாலுக் முகமது மற்றும் முகமது நிஜாம், ஷிவானி குழுமத் தலைவர் செல்வராஜ், ராமகிருஷ்ணா கல்லூரி ராமகிருஷ்ணன், மூகாம்பிகை கல்லூரி சேகர் உள்ளிட்டோர், பல்கலை துணைவேந்தர் தேவதாஸ் மனோகரனிடம் நேற்று முறையிட சென்றனர்.

பல்கலை வளாக மரத்தடியில், துணைவேந்தரை பார்க்க காத்துக் கிடந்தனர். அதன்பின் துணைவேந்தர் இவர்களை அழைத்துப் பேசினார்.துணைவேந்தருடன், கல்லூரித் தலைவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, 'துணைவேந்தர் அறைக்குள் கைகலப்பு' என்று தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து எம்.ஏ.எம்., கல்லூரி முதல்வர் மாலுக் முகமது கூறியதாவது:

சென்னை அண்ணா பல்கலையில் எம்.இ., கவுன்சிலிங் நடக்கிறது. சென்னை, மதுரை, கோவை அண்ணா பல்கலையில், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் அளித்த மற்றும் அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் கல்லூரிகளுக்கு கூட இசைவு வழங்கிவிட்டனர்.

திருச்சி அண்ணா பல்கலையில் மட்டும் வழங்க வில்லை. துணைவேந்தரை சந்தித்து முறையிட்டபோது, 'அரசிடம் இருந்து எனக்கு அரசாணை வரவில்லை' என்கிறார். புதிய கல்லூரிகளுக்கு மட்டுமே அரசாணை வரும்.

பழைய கல்லூரியில் புதிய பாடத்திட்டங்களை ஆரம்பிக்கும் போது எப்படி வரும் என்பது ஒரு துணைவேந்தராக இருப்பவருக்கு தெரியாதா? இதுகுறித்து அரசுக்கு கடிதம் ஏதாவது எழுதியிருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு, இல்லை என்று அலட்சியமாக பதிலளிக்கிறார்.பல்கலைக்கு உட்பட்ட, 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலை இசைவுக்காக காத்திருக்கின்றன.துணைவேந்தரின் அலட்சியத்தால், பொறியியல் கல்லூரிகள் மட்டுமின்றி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவர். எனவே, அரசே இவ்விஷயத்தில் நேரடியாக தலையிட வேண்டும்.இவ்வாறு மாலுக் முகமது கூறினார்.

பெயர் கூறவிரும்பாத மற்ற நிர்வாகிகள் கூறியதாவது:திருச்சி அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவியேற்ற நாளில் இருந்து பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கிறார். அவருக்கு கப்பம் கட்டாதவர்களை ஓரம் கட்டும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

மற்ற பல்கலை அனைத்துக்கும் அங்கீகாரம் தருகின்றனர். இவர் மட்டும், 'நாங்கள் முயற்சி எடுக்கிறோம்' என்கிறார். 'திருச்சி அண்ணா பல்கலை கலைக்கப்படும்' என்று அரசு அறிவித்திருப்பதால், இறுதிக்கட்ட வசூலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

ஒரு கல்லூரிக்கு, 15 லட்ச ரூபாய் கொடுக்க இஷ்டமில்லாததால், இவ்விஷயத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவிருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

குற்றச்சாட்டு குறித்து துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் கூறியதாவது:

சம்பந்தப்பட்ட கல்லூரிகள், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்றுவிட்டால், நேரடியாக, 'டான்செட்' மூலம் தேர்வெழுதி, மாணவர்களை கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம்.

பல்கலை, இசைவு மட்டுமே வழங்கும். எங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. பணம் வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.இவ்வாறு தேவதாஸ் மனோகரன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us