/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நாடார் மஹாஜன சங்க பள்ளி நூற்றாண்டு விழாநாடார் மஹாஜன சங்க பள்ளி நூற்றாண்டு விழா
நாடார் மஹாஜன சங்க பள்ளி நூற்றாண்டு விழா
நாடார் மஹாஜன சங்க பள்ளி நூற்றாண்டு விழா
நாடார் மஹாஜன சங்க பள்ளி நூற்றாண்டு விழா
ADDED : ஜூலை 27, 2011 03:12 AM
கீழக்கரை:மாயாகுளம் நாடார் மஹாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் சங்க நூற்றாண்டு விழா, புதிய பள்ளி கட்டட திறப்பு விழா, நுழைவு வாயில் திறப்பு விழா, மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமையில் நடந்தது.தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இயக்குனர்கள் ராஜ்சேகர், சேகர், முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், பள்ளி கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அன்னை கண் மருத்துவமனை டாக்டர் சந்திரசேகரன்,சங்க துணை தலைவர்கள் நம்பு பிச்சை, ஜெயக்குமார்,பள்ளி கமிட்டி தலைவர்முன்னிலை வகித்தனர்.டாக்டர் மதுரம் குத்து விளக்கேற்றினார்.
கனகமணி கிளினிக் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்த ராஜ் தோரணவாயிலையும், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இயக்குனர்கள் விக்ரமன் பள்ளிக் கட்டடத்தையும், அரவிந்த் குமார் கல்வெட்டையும் திறந்து வைத்தனர். ஆண்டறிக்கையை பள்ளி தலைமை ஆசிரியை சுகிபாலின் வாசித்தார்.டாக்டர் அரவிந்தராஜ் மேஜை, நாற்காலிகள் வழங்கினார். ராமநாதபுரம் தொழில் அதிபர் அப்பாதுரை, நூலகம் ஏற்படுத்த நன்கொடை மற்றும் புத்தகங்கள் வழங்கினார். மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் பூலோகசுந்தர விஜயன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் செல்வமணி, ஓய்வு தலைமை ஆசிரியர் பால்பாண்டி, ஜமாத்தலைவர் ஹனிபா மற்றும் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சங்க மேலாளர் அசோகன் நன்றி கூறினார்.