Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணி பாதுகாப்பு கோரி மனு

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணி பாதுகாப்பு கோரி மனு

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணி பாதுகாப்பு கோரி மனு

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணி பாதுகாப்பு கோரி மனு

ADDED : ஜூலை 11, 2011 11:08 PM


Google News

கடலூர் : 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணியாற்றும் 'பைலட்' மற்றும் தொழிலாளர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து கொடுத்துள்ள மனு: 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றோம். 12 மணி நேரம் பணிபுரியும் எங்களுக்கு 8 மணி நேர பணி வழங்க வேண்டும். நோயாளிகளை கையாள்வதால் எங்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். வாகனங்களின் டயர்களில் ஆயுட்காலம் முடிந்த பிறகும் 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இயக்க வேண்டியுள்ளதால் வாகனம் அடிக்கடி பழுதாகிறது. நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த நிலைகளை போக்க வேண்டும்.



அகவிலைப்படியை மாதம் தோறும் சம்பளத்துடன் வழங்க வேண்டும். பழிவாங்கும் நோக்கில் மாறுதல் உத்தரவு வழங்கக்கூடாது. தனியாக மருத்துவப்படி வழங்க வேண்டும். ஆம்புலன்சை முறையாக பராமரிக்கவும், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும். ஓய்விட வசதி ஏற்படுத்தி தரவேண்டும். 108 ஆம்புலன் சேவையை அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும். எங்கள் பணியை நிரந்தரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us