/உள்ளூர் செய்திகள்/சென்னை/தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு சி.பி.ஐ., குறிதி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு சி.பி.ஐ., குறி
தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு சி.பி.ஐ., குறி
தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு சி.பி.ஐ., குறி
தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு சி.பி.ஐ., குறி
ADDED : ஆக 21, 2011 02:04 AM
தி.மு.க., முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணையை சி.பி.ஐ., துவக்கியுள்ளது. ஊழல் மூலம் குவித்த கோடிக்கணக்கான பணம் குறித்த இந்த விசாரணைக்கு வருமானவரித்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் உதவி வருகின்றனர். தி.மு.க.,வினர் மீது, தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்கள் கொடுக்கப்படுவதாக தினமும் செய்திகள் வெளியாகின்றன. இதை படிக்கும் சாதாரண மக்களுக்கு பெரும் ஆச்சர்யம் ஏற்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக, இவர்கள் முழுநேரமும், நில அபகரிப்பில் தான் ஈடுபட்டுக் கொண்டிருந்தனரா என்ற கேள்வியும் இயற்கையாகவே எழுகிறது. இந்த அளவுக்கு பணம் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?ஏன், இவ்வளவு அதிகமாக புகார்கள் கொடுக்கப்படுகின்றன? இதில் எவ்வளவு பணம் புழங்குகிறது? இந்த பணத்தை எல்லாம், ஏன் நிலத்தில் முதலீடு செய்தனர் என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன.ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு நிலத்தை வாங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, அந்த நிலத்துக்கான விலையை, பத்து லட்ச ரூபாய் என, பதிவு செய்கின்றனர். இது தொடர்பாக வரித் துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினால், பத்து லட்ச ரூபாய்க்கு மட்டும் கணக்கு காட்டுவர். மீதமுள்ள 90 லட்ச ரூபாய், கறுப்பு பணமாகவே இருக்கும்.தி.மு.க.,வினர், முறைகேடுகள் மூலம் பணம் ஈட்டும்போதெல்லாம், அதை முதலீடு செய்வதற்கு, நிலத்தைத் தான் தேர்வு செய்கின்றனர். விலை அதிகமாக கூறப்படும்போது, தங்களின் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, பயன் அடைகின்றனர். இதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை, பழி வாங்கும் அரசியல் என, கூற முடியாது. இன்னும் அதிகமான வழக்குகள் பதிவாகலாம். தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக, ஊழல் வழக்குகள் தொடுப்பதற்காக, பத்திர பதிவு தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியில், தமிழக அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.கோவையின் முதல் ஷாப்பிங் மால், தி.மு.க., முக்கிய குடும்ப உறுப்பினர்களின் கைகளுக்கு மாற்றி விடப்பட்டுள்ளதாகவும், இதற்கான விலையான 800 கோடி ரூபாய், ஒரே தவணையாக செலுத்தப்பட்டாதாகவும் கூறப்படுகிறதுசமீபத்தில் தி.மு.க.,வின் பொதுக் குழு கூட்டம், கோவையில் உள்ள, ஒரு மில்லில் நடந்தது. இந்த மில், தற்போது சிறையில் இருக்கும் பெண் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. '2ஜி'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் கிடைத்த பணம், சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தங்களது பெயரிலோ, நம்பிக்கைக்குரிய பினாமிகளின் பெயரிலோ, இவற்றை முதலீடு செய்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள தி.மு.க.,வின் முக்கிய தலைவர்களுக்கு சொந்தமாக, பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை அனைத்தும், கடந்த ஐந்தாண்டுகளில் வாங்கப்பட்டவை.ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் விற்பனை செய்யப்படும்போது, அதுபற்றிய விவரம், வருமானவரித் துறைக்கு தானாகவே தெரிந்து விடும். ஆம். இது உண்மை. தி.மு.க.,வின் மத்திய அமைச்சர், முக்கியமான நகரங்களில், தங்களது கட்சிக்காரர்களை பாதுகாப்பதற்காக, அலுவலகங்கள் அமைத்துள்ளார். ஏதாவது ஒரு இடத்தில் சோதனை, ஆய்வு ஆகியவை நடந்தால், உடனடியாக, சம்பந்தபட்ட அதிகாரிக்கு டெலிபோன் வரும். விவகாரத்தை சுமுகமாக கையாளுவதற்கு, சம்பந்தபட்ட அதிகாரி அனுமதிக்க மாட்டார் என, கட்சி கருதினால், அந்த அதிகாரியும், அந்த குழுவில் உள்ள முக்கியமான உறுப்பினர்களும், விரும்பத்தகாத இடத்துக்கு பணியிட மாற்றம் என்ற பெயரில் தூக்கி அடிக்கப்படுவர். இதன்மூலம், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய், அமைச்சருக்கு கிடைக்கிறது.சாதாரணமாக ஒருவர், வரி ஏய்ப்பு செய்தால், 300 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். வரி ஏய்ப்புக்கு தூண்டி விடுவதும், சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க கூடிய தண்டனைக்குரிய குற்றம் தான்.அதேநேரத்தில், வரி ஏய்ப்பு மற்றும் வரி ஏய்ப்புக்கு தூண்டும் நடவடிக்கைøயை அமைச்சரே செய்தால்?இதுபோன்ற நடவடிக்கைகளை, கூட்டணி தர்மம் என கூறி, பிரதமர் மன்மோகன் சிங் தப்பிக்க முடியாது.மதுரையில் என்னவெல்லாமே நடந்தது. அறக்கட்டளை தொடர்பான வழக்குகளை முறைப்படுத்தும்படி, மத்திய அமைச்சர், கமிஷனர்களை கட்டாயப்படுத்துகிறார். இதில் ஏதாவது தாமதம் ஏற்பட்டால், கமிஷனரை மரியாதை குறைவாக பேசுகிறார். மத்திய அரசின் இணைச் செயலர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஆர்.எஸ்., அதிகாரியை மரியாதை குறைவாக பேசலாமா? வருமான வரித் துறை அதிகாரிகளை, தி.மு.க.,வின் சாதாரண தொண்டர்கள் கூட இப்படித் தான் மிரட்டுகின்றனர். கடமையைச் செய்யும் அதிகாரிகளை, பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.வருவாய் துறையை கையில் வைத்திருக்கும் தி.மு.க., அமைச்சரின் சகோதரர், இத்துறையில் இணை கமிஷனராக பணியாற்றியவர். ஊழல் அதிகாரி என அறியப்பட்டவர். ஊழல் புகாரில் தப்பிப்பதற்காக, தனது சகோதரரின் உதவியுடன், எளிதாக விருப்ப ஓய்வு பெற்றார். இவர் மீது, பல ஊழல் புகார்கள், விசாரணை நிலுவையில் உள்ளன.
தற்போது, அமைச்சரின் அனைத்து சகோதரர்களும், பணம் வசூலிப்பது, பணியிட மாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கு புரோக்கர்களாக செயல்படுகின்றனர்.அமைச்சரால் பாதிக்கப்பட்ட நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட குழுவினர், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். தி.மு.க.,வினரைப் பற்றிய தகவல்களையும், இந்த குழுவினர் திரட்டி வருகின்றனர்.தே.ஜ., கூட்டணி ஆட்சியில், ம.தி.மு.க.,வைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன், மத்திய அரசின் நிதித் துறை இலகாவை கவனித்து வந்தார். இவரது தனிச் செயலருக்கு சொந்தமான இடத்தில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, சி.பி.ஐ., சோதனை நடத்தியது. இந்த குற்றச்சாட்டு, அத்தனை தீவிரமானது இல்லை என்றாலும், இதற்கு பொறுப்பேற்று, செஞ்சி ராமச்சந்திரன், தன் பதவியை ராஜினாமா செய்தார்.ஆனால், தற்போதை அமைச்சரின் சகோதரர்கள், புரோக்கர்களாக செயல்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதிக்கின்றனர்.இதற்கு சி.பி.ஐ., என்ன செய்யப் போகிறது? தினமலர் இதழில் இதற்கு முன் வெளியான கட்டுரைகளின் அடிப்படையில், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்போது, இது தொடர்பான தகவல்களை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க நேர்மையான வருமானவரித்துறை அதிகாரிகள் தயாராக உள்ளனர்.தமிழக வருமானவரித்துறையைப் பொறுத்த வரை தி.மு.க., அமைச்சர்கள் பதவி வகித்த காலம் ஏழரை சனி பிடித்த காலமாக உள்ளது. சனி எப்போது விலகும்?
நமது சிறப்பு நிருபர்