ADDED : ஆக 19, 2011 06:16 AM
உடன்குடி:உடன்குடியில் பெயிண்ட் கடையில் பூட்டை உடைத்து ரொக்க பணம் ரூ.7 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, செட்டியாபத்து கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் இரும்பு, பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இரவு மர்ம ஆசாமிகள் கடையின் பின்புறம் உள்ள கதவின் பூட்டை உடைத்து கடையினுள்ளே இருந்த ரொக்க பணம் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து குலசேகரன்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.