/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிங்களர் மீதான தாக்குதல் சம்பவம்: ஏர்போர்ட்டில் கண்காணிப்பு தீவிரம்சிங்களர் மீதான தாக்குதல் சம்பவம்: ஏர்போர்ட்டில் கண்காணிப்பு தீவிரம்
சிங்களர் மீதான தாக்குதல் சம்பவம்: ஏர்போர்ட்டில் கண்காணிப்பு தீவிரம்
சிங்களர் மீதான தாக்குதல் சம்பவம்: ஏர்போர்ட்டில் கண்காணிப்பு தீவிரம்
சிங்களர் மீதான தாக்குதல் சம்பவம்: ஏர்போர்ட்டில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : ஆக 05, 2011 02:34 AM
திரிசூலம் : இலங்கையில் இருந்து சுற்றுலா வந்த சிலர் தாக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை வந்திறங்கும் சிங்களர்கள் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள சிங்களர்கள் பலர் ஒன்று சேர்ந்து, இந்தியாவிற்கு புனித பயணம் மேற்கொள்கின்றனர். இங்குள்ள புத்த விகாரங்கள், மடங்களுக்கு சென்று வழிபடுகின்றனர். இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலாவாக சில சிங்களர்கள், நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர்.பின், புரசைவாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர். அவர்கள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் சிங்களர்கள் வருகை குறித்த கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.எந்த விமானத்தில், எத்தனை சிங்களர்கள் வருகின்றனர், அவர்களின் இந்திய பயணம் குறித்த திட்டம் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்து, உடனடியாக அனுப்ப, கியூ பிராஞ்ச் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இலங்கையில் இருந்து சென்னை வரும் விமானங்களில் வந்து சேரும் சிங்களர்கள் குறித்த தகவல்களை, கியூ பிராஞ்ச் போலீசார் சேகரிக்க துவங்கியுள்ளனர். இதற்காக கூடுதல் போலீசார் ஏர்போர்ட்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் கைது:சென்னைக்கு சுற்றுலா வந்த சிங்கள புத்த பிட்சுக்களை மிரட்டிய,'நாம் தமிழர்' இயக்கத்தைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.இலங்கையைச் சேர்ந்த 84 சிங்கள புத்த பிட்சுக்கள், நேற்று முன்தினம் சென்னை வந்தனர். அவர்கள் புரசைவாக்கம்,பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் உள்ள டாரஸ் லாட்ஜில் தங்கியிருந்தனர். பொதுவாக, இலங்கையில் இருந்து வரும் புத்த பிட்சுக்கள், எழும்பூர், கென்னட் லேனில் உள்ள மகாபோதி சொசைட்டியில் தங்குவது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் அங்கு இடமில்லாததால், லாட்ஜில் தங்கியதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு, புத்தபிட்சுகள் இருந்த லாட் ஜ்க்கு, நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த மூவர் சென்றுள்ளனர். அங்கு அறைகளில் தங்கியிருந்தவர்களிடம்,''நீங்கள் இங்கெல்லாம் தங்கக் கூடாது.
மகாபோதி சொசைட்டியில் தங்க வேண்டியது தானே?'' என்று கூறி மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, புத்த பிட்சுக்கள் அணிந்திருந்த, சிங்கள எழுத்துக்கள் பொறி க்கப்பட்ட டி-சர்ட்களை அவிழ்க்கக் கூறி, அதனை வாங்கி எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பி விட்டனர்.சம்பவம் தொடர்பாக, வேப்பேரி போலீசில், லாட்ஜின் மேலாளர் மனோகரன் புகார் அளித்தார். இதற்கிடையில், லாட்ஜில் தங்கியிருந்த புத்த பிட்சுக்கள், மகாபோதி சொசை ட்டிக்கு சென்று விட்டனர். அங்கு அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக, நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 38. மகேந்திரன், 25, ராசுகுமார், 40 ஆகிய மூவரையும் கைது செய்தனர்.