Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்

ADDED : செப் 18, 2011 01:12 AM


Google News

தம்மம்பட்டி: தமிழக அரசின் புது வாழ்வு திட்டத்தின் மூலம் கெங்கவல்லி, தலைவாசல் ஒன்றியங்களில், படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு, பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

முகாமை, சேலம் மாவட்ட புதுவாழ்வு திட்ட மேலாளர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சி.என்.சி., ஜே.சி.பி., ஆப்ரேட்டர், டிரைவர், கேட்டரிங், நர்சிங், வெல்டிங், பிட்டர், ஓயர்மேன், வெல்டர், பிளம்பர், மோட்டார் மெக்கானிக், கொத்தனார் போன்ற தொழில்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, நேரடி வேலை வாய்ப்பு பெறுவதற்காக முகாம் நடத்தப்பட்டது. முகாமில், அம்பத்தூர் சி.என்.சி., கேப்பிட்டல், கள்ளக்குறிச்சி விஸ்வம் இன்ஸ்டிடியூட், சேலம் ஐ.எல்.எஃப்.எஸ்., கிளஸ்டர்ஸ், துவாக்குடி தமிழ்நாடு கேட்டரிங், சென்னை எல் அன்ட் டி கன்ஸ்ட்ரக்ஷன், சேலம் அரசினர் தொழில் பயிற்சி நிலையம் உள்ளிட்ட நிறுவனங்களில், 180 பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். முகாம் ஏற்பாடுகளை, புதுவாழ்வு திட்ட அலுவலர்கள் ராம்குமார், ராஜு, கருணாகரன், மயில் வண்ணன், சங்கீதா, சரவணன் ஆகியோர் செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us