/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மதக் கலவரத் தடுப்புச் சட்டத்திற்குஎதிராக மக்கள் போராட வேண்டும்மதக் கலவரத் தடுப்புச் சட்டத்திற்குஎதிராக மக்கள் போராட வேண்டும்
மதக் கலவரத் தடுப்புச் சட்டத்திற்குஎதிராக மக்கள் போராட வேண்டும்
மதக் கலவரத் தடுப்புச் சட்டத்திற்குஎதிராக மக்கள் போராட வேண்டும்
மதக் கலவரத் தடுப்புச் சட்டத்திற்குஎதிராக மக்கள் போராட வேண்டும்
ADDED : செப் 16, 2011 12:50 AM
விழுப்புரம்:மத்திய அரசு கொண்டு வரும் மதக் கலவரத் தடுப்புச் சட்டத்திற்கு
எதிராக மக்கள் போராட வேண்டும் என ஆர்.எஸ். எஸ்., தென் பாரதத் தலைவர்
வன்னியராஜன் தெரிவித்தார்.மாவட்ட சமுதாய நல்லிணக்கப் பேரவை கூட்டம்
விழுப்புரத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்., தென் பாரதத்
தலைவர் வன்னியராஜன் கூறியதாவது:மத்திய அரசு வரும் லோக்சபா கூட்டத்தில்
மதக்கலவரத் தடுப்புச் சட் டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கும்
நிலை ஏற்படும். இந்த சட்டத்தை ஆர்.எஸ். எஸ்., வன்மையாகக்
கண்டிக்கிறது.லோக்சபாவில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்துக்கள் வாழ
முடியாத நிலை ஏற்படும். ஆன்மிக அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன போராட்டங்கள்
நடத்த வேண்டும்.இவ்வாறு வன்னியராஜன் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.
எஸ்., கோட்டத் தலைவர் ஆடிட்டர் செல்வராஜ், நிர்வாகி ராமமூர்த்தி உட்பட பலர்
உடனிருந்தனர்.


