/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முன்னாள் தி.மு.க., ஒன்றிய துணைச்செயலாளர் உட்பட இருவர் கைதுமுன்னாள் தி.மு.க., ஒன்றிய துணைச்செயலாளர் உட்பட இருவர் கைது
முன்னாள் தி.மு.க., ஒன்றிய துணைச்செயலாளர் உட்பட இருவர் கைது
முன்னாள் தி.மு.க., ஒன்றிய துணைச்செயலாளர் உட்பட இருவர் கைது
முன்னாள் தி.மு.க., ஒன்றிய துணைச்செயலாளர் உட்பட இருவர் கைது
ADDED : செப் 06, 2011 01:18 AM
பேரூர்: மிரட்டி நிலத்தை அபகரித்த வழக்கு தொடர்பாக, முன்னாள் தி.மு.க., ஒன்றிய துணைச்செயலாளர் உட்பட இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், பெரியார் காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன். பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், இவருக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு, இவரது நிலத்தை மாஜி அமைச்சர் பழனிசாமியின் உதவியாளரான, பீளமேட்டைச் சேர்ந்த நாகராஜ் (50), வரதராஜபுரத்தைச் சேர்ந்த மீன்கடைசிவா (40), நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த, தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் பசுபதி (45), கோவையைச் சேர்ந்த வேணுகோபால் ஆகியோர் மிரட்டி அபகரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, குணசேகரன் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில், பேரூர் போலீசார் விசாரணை நடத்தி, குணசேகரனிடம் மிரட்டி நிலத்தை அபகரித்ததாக, கடந்த மாதம் 5ம் தேதி நான்குபேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில், பேரூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த தொண்டாமுத்தூர் முன்னாள் தி.மு.க., ஒன்றிய துணைசெயலாளர் தங்கமணி, தீத்திபாளையத்தைச் சேர்ந்த புரோக்கர் குணசேகரன் (தி.மு.க.,) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இருவரையும் பேரூர் போலீசார் கைது செய்தனர். மோசடியாக அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ஒன்றரை கோடியாகும்.


