/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அடிப்படை வசதிகளை மேம்படுத்த இ.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்அடிப்படை வசதிகளை மேம்படுத்த இ.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
அடிப்படை வசதிகளை மேம்படுத்த இ.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
அடிப்படை வசதிகளை மேம்படுத்த இ.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
அடிப்படை வசதிகளை மேம்படுத்த இ.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தல்
ADDED : செப் 02, 2011 11:13 PM
திருப்பூர் : இ.கம்யூ., கிளை மாநாடுகளில்,மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
* இ.கம்யூ., கருவம்பாளையம் கிளை மாநாடு, செயலாளர் நாச்சிமுத்து தலைமையில் நடந்தது.
மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். புதிய செயலாளராக திருமூர்த்தி, துணை செயலாளராக சுப்ரமணியம், பொருளாளராக தங்கராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தெற்கு வட்டார மாநாட்டு பிரதிநிதிகளாக ரவி, விஜயலட்சுமி உட்பட நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். 'கருவம்பாளையம் அரசு பள்ளியில், மாணவ, மாணவியர் 1,123 பேர் பயில்கின்றனர். ஆசிரியர்கள் 26 பேர் மட்டுமே உள்ளனர். கல்வி நலன் கருதி, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். செல்லம் நகரில் ரோடு, சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* மாநகராட்சியில் 44, 45வது வார்டு கிளை மாநாடு, நிர்வாகி பழனிசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் ஜெகநாதன், மாநில குழு உறுப்பினர் காளியப்பன் முன்னிலை வகித்தனர். புதிய செயலாளராக தண்டபாணி, துணை செயலாளராக பொன்னுசாமி, பொருளாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டனர்.'வார்டு பகுதிகளில் சாக்கடை வசதியை மேம்படுத்த வேண்டும். ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் குழிகளை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* இ.கம்யூ., கிளை மாநாடு துணை செயலாளர் கோபால் தலைமையில் நடந்தது. மாவட்ட, மாநிலக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். புதிய செயலாளராக ராமசாமி, துணை செயலாளராக கோபால், பொருளாளராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டனர்.'மங்கலம், இடுவாய் ஊராட்சி பகுதிகளில், சாக்கடை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்,' என ஊராட்சி நிர்வாகங்களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.