அர்ச்சுனா நதியில் தடுப்பணைகட்டுவதை எதிர்த்து வழக்கு:அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
அர்ச்சுனா நதியில் தடுப்பணைகட்டுவதை எதிர்த்து வழக்கு:அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
அர்ச்சுனா நதியில் தடுப்பணைகட்டுவதை எதிர்த்து வழக்கு:அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ADDED : ஆக 27, 2011 11:45 PM
மதுரை:விருதுநகர் மாவட்டம் கன்னிசேரியில், அர்ச்சுனா நதியில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரிய பொது நல வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, இதுகுறித்து செப்., 6க்குள் பதிலளிக்க பொதுப்பணித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.சாத்தூர் கோல்வார்பட்டி நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்க தலைவர் ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு:கோல்வார்பட்டி பெரிய கண்மாய் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மகாலிங்கம் மலை பிளவக்கல் அணையில் இருந்து அர்ச்சுனா நதி வழியாக நீர் வரத்து இருக்கும். 1984ல் சிவகாசி, விருதுநகர் குடிநீர் தேவைக்காக அர்ச்சுனா நதியில் அரசு ஆணைக்குட்டத்தில் நீர்தேக்கம் கட்டியது. அப்போது கோல்வார்பட்டி விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என 18 கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கண்மாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என, அரசு உறுதியளித்ததால், எதிர்ப்பு கைவிடப்பட்டது.
இந்நிலையில், கன்னிசேரியில் அர்ச்சுனா நதியில் அரசு, வெள்ளத்தடுப்பு அணை கட்டி வருகிறது. கோல்வார்பட்டி கண்மாய்க்கு நீர் வரத்து பாதிக்கப்படும். அணை கட்ட தடை விதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஐயப்பன், ஜெயா இந்திரபட்டேல் ஆஜராயினர்.நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச், இதுகுறித்து செப்., 6க்குள் பதிலளிக்க பொதுப்பணித்துறை செயலாளர், கலெக்டர், கண்காணிப்பு பொறியாளர், ஆர்.டி.ஒ.,வுக்கு உத்தரவிட்டது.


