/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நூறு நாள் வேலைக்கு செல்வதில் தாமதம் :தட்டிக்கேட்டதால் பொது மக்கள் மறியல்நூறு நாள் வேலைக்கு செல்வதில் தாமதம் :தட்டிக்கேட்டதால் பொது மக்கள் மறியல்
நூறு நாள் வேலைக்கு செல்வதில் தாமதம் :தட்டிக்கேட்டதால் பொது மக்கள் மறியல்
நூறு நாள் வேலைக்கு செல்வதில் தாமதம் :தட்டிக்கேட்டதால் பொது மக்கள் மறியல்
நூறு நாள் வேலைக்கு செல்வதில் தாமதம் :தட்டிக்கேட்டதால் பொது மக்கள் மறியல்
ADDED : ஆக 11, 2011 10:58 PM
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.நெடுஞ்சேரியில் நூறு நாள் வேலைக்கு தாமதமாக சென்றவர்களை தட்டிக்கேட்டதால் பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டி.நெடுஞ்சேரி ஊராட்சியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் நூறு நாள் வேலை நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டியவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றுள்ளனர். இதனால் ஆத்திரடைந்த மக்கள் நலப்பணியாளர் காஞ்சிராணி பெயர் பட்டியலில் சேர்க்க மறுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைக்கு சென்றவர்கள் சிதம்பரம்- காட்டுமன்னார்கோவில் சாலையில் டி.நெடுஞ்சேரி புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த புத்தூர் சப் இன்ஸ்பெக்டர் ராதா, பி.டி.ஓ., சீத்தாலட்சுமி பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.