/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புதிய பஸ் நிலைய இடம் தேர்வு : உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆய்வுபுதிய பஸ் நிலைய இடம் தேர்வு : உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆய்வு
புதிய பஸ் நிலைய இடம் தேர்வு : உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆய்வு
புதிய பஸ் நிலைய இடம் தேர்வு : உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆய்வு
புதிய பஸ் நிலைய இடம் தேர்வு : உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆய்வு
ADDED : ஆக 01, 2011 02:52 AM
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நேற்று தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறையில் 1965ம் ஆண்டு பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இரண்டு பஸ் நிலையங்களாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2006ம் ஆண்டு மயிலாடுதுறை, திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில் நந்தவ ணத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம் அமைக்க அதே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை நேற்று காலை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால், நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி, மயிலாடுதுறை எம்.பி., ஓ. எஸ்.மணியன், எம்.எல்.ஏ.,க்கள் மயிலாடுதுறை அருள்செல்வன், பூம்புகார் பவுன்ராஜ், வேதாரண்யம் காமராஜ், சீர்காழி சக்தி, நாகை மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.