ADDED : ஜூலை 19, 2011 09:19 PM
கோவை : அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 23ம் தேதி கிராமசபை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கோவை கலெக்டர் அறிக்கை:கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 23ம் தேதி காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டம், அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும்.
அந்த கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பின் தங்கிய பகுதிக்கான மானியத் திட்டம், முழு சுகாதாரத் திட்டம், 2011 ஜனவரி முதல் ஜூன் முடிய கிராம ஊராட்சியின் பொது நிதி செலவினம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவா திக்கப்படும். அனைத்து பொது மக்களும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


