திருச்சி மேற்கு இடைத்தேர்தல் பணிகள்
திருச்சி மேற்கு இடைத்தேர்தல் பணிகள்
திருச்சி மேற்கு இடைத்தேர்தல் பணிகள்
ADDED : அக் 10, 2011 02:56 AM
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, பணிபுரியும் போலீஸார் கம்ப்யூட்டர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.அக்டோபர் 13ம் தேதி நடைபெற உள்ள திருச்சி மேற்கு சட்டசபை இடைத்தேர்லையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.பொதுமக்கள் ஓட்டளிக்க ஏதுவாக 240 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபட ஒரு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் உள்ப ட மொத்தம் 4 பணியாளர்கள் ஒவ்ö வா ரு ஓட்டுச்சாவடிக்கும் தேர்வு செய்து இவர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி வகுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல 240 ஓட்டுச்சாவடிகளிலும் மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரியம் அலுவலர்களை நுண் பார்வையாளராக பணியமர்த்தவும், ஓட்டுச்சாவடியை கண்காணிக்க வெப் காமிரா பொருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பாதுகாப்பு பணிக்கு ஒரு போலீஸாரை பணியமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு, போலீஸார் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது.ஓட்டுச்சாவடியில் பணியமர்த்தப்பட உள்ள போலீஸாரை கம்ப்யூட்டர் குலுக்கல் மூலம் கலெக்டர் ஜெயஸ்ரீ முன்னிலையில், தேர்தல் பார்வையாளர் (போலீஸ்) பராசிவமூர்த்தி நேற்று தேர்வு செய்தார்.மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருள் போன்ற பொருட்களை யாரேனும் விநியோகம் செய்தால், 94887-60656 என்ற மொபைல்ஃபோன், 0431-2462344 என்ற டெலிஃபோன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.இத்தகவலை கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
பயிற்சி வகுப்பு: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் மைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று முன்தினம் நடந்தது. டி.ஆர்.ஓ., மாணிக்கம் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசுகையில், '' ஓட்டுச்சீட்டு குறித்து ஏதும் புகார் இருந்தால், 94450-00602, 94450-00455 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.


