/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/நகைக்கடை திருட்டுக்களை தவிர்க்க "சுழல் கேமரா' பொருத்த ஆலோசனைநகைக்கடை திருட்டுக்களை தவிர்க்க "சுழல் கேமரா' பொருத்த ஆலோசனை
நகைக்கடை திருட்டுக்களை தவிர்க்க "சுழல் கேமரா' பொருத்த ஆலோசனை
நகைக்கடை திருட்டுக்களை தவிர்க்க "சுழல் கேமரா' பொருத்த ஆலோசனை
நகைக்கடை திருட்டுக்களை தவிர்க்க "சுழல் கேமரா' பொருத்த ஆலோசனை
ADDED : ஆக 11, 2011 10:54 PM
சிவகங்கை : நகைக்கடை திருட்டுக்களை தவிர்க்க, 24 மணி நேரமும் சுழலும் 'கேமரா' பொருத்துமாறு, நகைக்கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக,'' பன்னீர்செல்வம் எஸ்.பி., தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,'' தேவகோட்டை நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். நகைக்கடைக்காரர்களும் தங்கள் கடைகளின் பாதுகாப்பு கருதி, ஒரே தெருக்களில் உள்ள கடைக்காரர்கள் 'செக்யூரிட்டி'களை நியமிக்கலாம். தெருவிளக்கு மட்டுமின்றி, கடைகளுக்கு முன் போதிய விளக்குகள் பொருத்த வேண்டும். கடையின் உள்ளேயும், முன்,பின் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 'கேமரா' பொருத்த வேண்டும். விற்பனைக்கு தேவைப்படும் நகைகளை மட்டும் '÷ஷாகேஸ்'களில் வைத்து விட்டு, மற்றவற்றை வங்கி 'லாக்கரில்' வைக்கலாம். இது போன்ற நடைமுறைகளை நகைக்கடை உரிமையாளர்கள் பின்பற்றினால், திருட்டுக்களை தவிர்க்கலாம்,'' என்றார். எஸ்.பி.,தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் உடனிருந்தார்.