இரு பெண் குழந்தைகள் பிறந்தால்... அரசு உதவித் தொகை உயருமா?
இரு பெண் குழந்தைகள் பிறந்தால்... அரசு உதவித் தொகை உயருமா?
இரு பெண் குழந்தைகள் பிறந்தால்... அரசு உதவித் தொகை உயருமா?
சென்னை: ''ஒரு பெண் குழந்தை இருந்தால், அவரது பெயரில் 50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், தலா 25 ஆயிரமும் தரப்படுகிறது.
சமூக நலத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நடந்த விவாதம்;
பாலபாரதி - மார்க்சிஸ்ட்: மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும், ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் அவ்வாறு தான் வழங்கப்படுகிறது. 60 சதவீத ஊனம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட்டு, மற்ற மாநிலங்களில் உள்ளது போல, 40 சதவீத ஊனம் இருந்தாலே, அரசு நலத் திட்ட உதவிகளைப் பெற வகை செய்ய வேண்டும். அரசு உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு வேலை கிடையாது என்ற நிலை உள்ளது. இதை மாற்றி, அரசு வேலை பெற்ற பின், உதவித் தொகை வழங்குவதை நிறுத்தலாம். ஒரு குழந்தைக்கு 70 காசு, 80 காசு தான் ஒரு நாள் சத்துணவுக்கு செலவிடப்படுகிறது. விலை உயர்வுக்கு ஏற்ப, இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும்.
லிங்கமுத்து- இந்திய கம்யூனிஸ்ட்: கடந்த ஆட்சியில், சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ஒரு லட்சம், இரண்டு லட்ச ரூபாய் பெற்றனர். வேலையும் கிடைக்கவில்லை. பணமும் திருப்பித் தரப்படவில்லை. எனவே, பணத்தை திருப்பிக் கொடுக்க வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கடேசன் - தே.மு.தி.க.,: அனைத்து திருமண உதவித் திட்டங்களிலும் உதவி பெற நிர்ணயித்துள்ள வருமான வரம்பை உயர்த்த வேண்டும். ஒரு பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் தலா 25 ஆயிரமும், அந்த குழந்தைகள் பெயரில் டிபாசிட் செய்யும் திட்டம் உள்ளது. ஒரே பிரசவத்தில் இரண்டு அல்லது மூன்று பெண் குழந்தைகள் பிறந்தால், அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் அரசின் நிலைப்பாடு என்ன?இவ்வாறு, விவாதம் நடந்தது.