ADDED : ஜூலை 15, 2011 01:02 AM
சேலம்: சேலம் பொன்னம்மாபேட்டை குருவாயூப்பன் கோவில் அருகே, ரயில் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலங்காட்டை சேர்ந்தவர் மதுரைமுத்து(58). இவர் சேலம் பொன்னம்மாபேட்டையில் உள்ள தன் உறவினர்களை பார்ப்பதற்காக சேலம் வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் பொன்னம்மாபேட்டையில் உள்ள குருவாயூரப்பன் கோவில் அருகில் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மதுரை முத்துவை அப்பகுதி மக்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


