ADDED : ஜூலை 25, 2011 09:39 PM
சூலூர் : முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகையை ஒட்டி சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடந்தன.
கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், சின்னியம்பாளையம் கணபதீஸ்வரர் கோவில், சூலூர் வைத்தியநாத சுவாமி கோவில், கண்ணம்பாளையம் அறுபடை முருகன் உள்ளிட்ட கோவில்களில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. அதிகாலையில் 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. சூலூரில் பக்தர்கள் பால்குடம், பன்னீர் குடம் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.