/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாவட்ட கதர் விற்பனை இலக்கு: ரூ. 70 லட்சம் நிர்ணயம்கரூர் மாவட்ட கதர் விற்பனை இலக்கு: ரூ. 70 லட்சம் நிர்ணயம்
கரூர் மாவட்ட கதர் விற்பனை இலக்கு: ரூ. 70 லட்சம் நிர்ணயம்
கரூர் மாவட்ட கதர் விற்பனை இலக்கு: ரூ. 70 லட்சம் நிர்ணயம்
கரூர் மாவட்ட கதர் விற்பனை இலக்கு: ரூ. 70 லட்சம் நிர்ணயம்
ADDED : அக் 06, 2011 03:26 AM
கரூர்: 'கரூர் மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை மூலம் 70 லட்ச ரூபாய்
மதிப்பில் கதர் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது'
என மாவட்ட கதர் வாரிய உதவி இயக்குநர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் 2010ம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையின் போது 70 லட்ச
ரூபாய் மதிப்பில் கதர் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. கதர் மற்றும் பாலியெஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதமும்,
பட்டு மற்றும் கம்பளி ரகங்களுக்கு 20 சதவீதமும் மத்திய, மாநில அரசுகளால்
சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு அலுவலர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும்
பணியாளர்களுக்கு எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கதர்
கிராம தொழில் வாரியத்தின் கதர் அங்காடிகள் மற்றும் அனைத்து பஞ்சாயத்து
யூனியன்களில் துவக்கப்பட்டுள்ள தற்காலிக கதர் விற்பனை நிலையங்களில் கதர்
ரகங்களை வாங்கி, கிராமப்புற நூற்போர், நெய்வோர் வாழ்வில் ஒளியேற்ற
வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கரூர் தாந்தோணிமலையில் கதர் ரகங்கள் விற்பனை மையத்தின் முதல் விற்பனையை மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா துவக்கி வைத்தார்.


