நம்பர் 1 இடத்தை பிடிக்குமா இங்கிலாந்து?
நம்பர் 1 இடத்தை பிடிக்குமா இங்கிலாந்து?
நம்பர் 1 இடத்தை பிடிக்குமா இங்கிலாந்து?
ADDED : ஜூலை 14, 2011 03:50 PM
லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பெற இந்தியாவுக்கு எதிரான தொடரை 2-0 அல்லது 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெல்ல வேண்டும்.
ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 125 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்ரிக்கா 118 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து 117 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன. அடுத்த வாரம் துவங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 அல்லது 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றால் தரவரிசையில் முதலிடத்தை பெற முடியும். அவ்வாறில்லாமல் 1-0 அல்லது 2-1 என்ற கணக்கில் வென்றால் இரண்டாம் இடத்தோடு திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியது தான்.