/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மானிய விலையில் நிலக்கடலை விதை: வேளாண் இணை இயக்குனர்மானிய விலையில் நிலக்கடலை விதை: வேளாண் இணை இயக்குனர்
மானிய விலையில் நிலக்கடலை விதை: வேளாண் இணை இயக்குனர்
மானிய விலையில் நிலக்கடலை விதை: வேளாண் இணை இயக்குனர்
மானிய விலையில் நிலக்கடலை விதை: வேளாண் இணை இயக்குனர்
ADDED : ஜூலை 13, 2011 11:49 PM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் தேவையான அளவு நிலக்கடலை விதைகள் இருப்பு
உள்ளது. விவசாயிகள் மானிய விலையில் நிலக்கடலை விதைகளை பெற்ற பயன் பெறலாம்.
வேளாண் இணை இயக்குனர் (பொ) மனோகரன் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி
மாவட்டத்தில் நிலக்கடலை இரு பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. நவம்பர் -
டிசம்பரில் 5,800 ஹெக்டேரும், ஜூன், ஜூலை பருவத்தில் 9,200 ஹெக்டேரும்
நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, மழையை எதிர்பார்த்து
விவசாயிகள் நிலக்கடலை சாகுபடிக்கு நிலங்களை தயார் செய்து வருகின்றனர்.
நடப்பாண்டில் மேலும் 4,200 ஹெக்டேர் நிலக்கடலை சாகுபடி செய்ய
வாய்ப்புள்ளது. சாகுபடி பரப்பில் ஐந்து சதவீதம் நிலக்கடலை விதை வேளாண்
விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. ஜூன், ஜூலை
பருவத்தில் எதிர்பார்க்கப்படும் 9,200 ஹெக்டேருக்கு 92 மெட்ரிக் டன்
விதைகள் தேவையான அளவில் இருப்பில் உள்ளது. தர்மபுரி மாவட்ட வேளாண்
விரிவாக்க மையங்கள் மூலமாக இது வரையில் 53,359 மெட்ரிக் டன் (நல்லம்பள்ளி,
சாமிசெட்டிப்பட்டி, உழவன்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்கள் சேர்த்து) நிலக்கடலை
விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 39.442 மெட்ரிக் டன் விதைகள்
இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்கள் தேவைக்க அருகில் உள்ள வேளாண் விரிவாக்க
மையங்களை அணுகி நிலக்கடலை விதைகளை பெற்று கொள்ளலாம்.
சான்று பெற்ற விதைகளின் முழு விலை 41 ரூபாய், ஐசோபாம் எண்ணெய் வித்து
திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 12 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மானிய
விலை நிலக்கடலை விதையை பெற விவசாயிகள் வட்டார உதவி வேளாண் இயக்குனர்களை
தொடர்பு கொண்டு வாங்கி பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


