ADDED : ஜூலை 25, 2011 09:38 PM
அன்னூர் : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க அன்னூர் கிளை துவக்க விழா நேற்று முன் தினம் நடந்தது.
சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தங்க முருகேசன் துவக்கி வைத்து பேசுகையில்,''பொதுமக்கள் மத்தியில் முற்போக்கு இலக்கிய வாசிப்பு வட்டத்தை அதிகப்படுத்த முயற்சி செய்து வருகிறோம்,' என்றார். மாதாந்திர கூட்டம் நடத்தவும், சூலூரில் நடைபெற உள்ள மாவட்ட மாநாட்டில் அன்னூரிலிருந்து அதிக அளவில் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது. கிளை தலைவராக சதீஷ்குமார், செயலாளராக முகமது முஷீர், பொருளாளராக பொன்விழி குமார் மற்றும் 10 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.