உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அரசுவெளியிட்டது
உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அரசுவெளியிட்டது
உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அரசுவெளியிட்டது
நெல்லிக்குப்பம்:உள்ளாட்சித் தேர்தலில், பேரூராட்சி, நகராட்சிகளில் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட, தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பட்டியலை, அர” வெளியிட்டுள்ளது.
கடந்த 1996 முதல் 2006 வரை, நெல்லிக்குப்பம் நகரமன்றத் தலைவர் பதவி, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. 2006 தேர்தலில், தலைவர் பதவி பொது என அறிவிக்கப்பட்டது. தி.மு.க., கூட்டணியில், வி.சி.,க்கு ஒதுக்கப்பட்டதால், பொதுப் பிரிவாக இருந்தும், தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கியதால், கெய்க்வாட் பாபு சேர்மன் ஆனார்.விதிப்படி, இம்முறை பொது என்பதால், போட்டி போட்டு அ.தி.மு.க.,வில் விருப்ப மனு கொடுத்தனர். இந்நிலையில், நெல்லிக்குப்பம் நகரமன்றத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 529 பேரூராட்சிகளில், தாழ்த்தப்பட்டோருக்கு 56, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 28, பழங்குடியினருக்கு 2, பழங்குடியின பெண்களுக்கு 1, பெண்கள் பொது 148 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 125 நகராட்சிகளில், தாழ்த்தப்பட்டோருக்கு 10, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 6, பழங்குடி இன பெண்களுக்கு 1, பெண்கள் பொது 35 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், பெண்ணாடம், கிள்ளை, காட்டுமன்னார்கோவில், புவனகிரி தாழ்த்தப்பட்டோருக்கும், அண்ணாமலை நகர், ஸ்ரீமுஷ்ணம், தொரப்பாடி பொது பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.நகராட்சிகளில் நெல்லிக்குப்பம் தாழ்த்தப்பட்டோருக்கும், சிதம்பரம் பொது பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், வடக்கனந்தல் தாழ்த்தப்பட்டோருக்கும், திருக்கோவிலூர், தியாகதுருகம், அனந்தபுரம், சின்னசேலம், கோட்டக்குப்பம் பொது பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில், எந்த நகராட்சிக்கும் எவ்வித ஒதுக்கீடும் இல்லை. அனைத்து நகராட்சிகளும் பொதுப் பிரிவுக்கு உட்பட்டது.