/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஆலங்குளம் வட்டார ஓய்வுபெற்றஆசிரியர் சங்க கூட்டம்ஆலங்குளம் வட்டார ஓய்வுபெற்றஆசிரியர் சங்க கூட்டம்
ஆலங்குளம் வட்டார ஓய்வுபெற்றஆசிரியர் சங்க கூட்டம்
ஆலங்குளம் வட்டார ஓய்வுபெற்றஆசிரியர் சங்க கூட்டம்
ஆலங்குளம் வட்டார ஓய்வுபெற்றஆசிரியர் சங்க கூட்டம்
ADDED : ஆக 22, 2011 02:24 AM
ஆலங்குளம்:ஆலங்குளம் வட்டார ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க கூட்டம்
நடந்தது.ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்
பள்ளியில் ஆலங்குளம் வட்டார ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்க
கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளி
தாளாளர் ஜெசிகரன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் சிவஞானம் வரவேற்றார்.
பொருளாளர் தேவதாஸ் ஆண்டறிக்கை வாசித்தார். சங்க ஆலோசகர் நடராஜன் முன்னிலை
வகித்தார்.
மாவட்ட இணை செயலாளர் ஆதிமூலம், புலவர் சிவராமலிங்கம், பாளை., தாலுகா
செயலாளர் ராமையா பேசினர். ஓய்வுபெற்று 75 வயது நிறைவடைந்த ஆசிரியர்கள்
கவுரவிக்கப்பட்டனர். வட்டார செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.