Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு

உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு

உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு

உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு

ADDED : செப் 10, 2011 12:20 AM


Google News

சென்னை : 'உள்ளாட்சித் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும்' என, மாநில தேர்தல் கமிஷனை தி.மு.க., கேட்டுக் கொண்டுள்ளது.இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க., நேற்று அளித்து மனு:உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், பாதுகாப்பாகவும் நடக்கும் என்ற உத்தரவாதத்தை, எழுத்து மூலமாக தேர்தல் கமிஷன் அளிக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய அளவில், துணை ராணுவப் படை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரை நிறுத்த வேண்டும்.ஓட்டு பதிவு தினத்தன்று, ஓட்டு சாவடிகள் பாதுகாப்புக்கு, இவர்களை நியமிக்க வேண்டும். தேர்தல் குறித்த புகார்களைப் பெற்று, உடனடி நடவடிக்கை எடுக்க, மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.தேர்தல் பணிகளில், மாநில போலீசாரின் பங்கைக் குறைத்து, துணை ராணுவப் படை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரிடம், தேர்தல் பணிகளை ஒப்படைக்க வேண்டும். நியாயமான தேர்தலை உறுதி செய்ய, குறைந்தது மூன்று ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொண்ட குழுவை, மாநில அளவில் அமைக்க வேண்டும்.மாவட்ட அளவில், கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, அவற்றுக்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். தேர்தல் புகார்களைப் பெற, 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் மையத்தை அமைக்க வேண்டும். ஓட்டு பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அவற்றை சி.டி.,யாக மாற்றி, கேட்கும் அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டும்.தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு போன்ற விவரங்களை, அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, தேர்தல் கமிஷன் விவரிக்க வேண்டும்.தேர்தலை நியாயமாக நடத்துவதற்கான உத்தரவாதத்தை, மாநில தேர்தல் கமிஷன் அளிக்கவில்லை எனில், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொள்ளும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us